Monday, 8 August 2016

Sad kavi

வலியின்💘
விளிம்பில் நான்💘
நீ💘
விட்டுச் சென்ற💘
வேதனைகளைக்💘
காதலிக்கிறேனடா💘
என் உயிர் உள்ளவரை💘

Kutty Kavi

இரண்டு💘
தண்டவாளங்களை💘
ஒன்றாய்💘
இணைக்கும்💘
வீண்முயற்சி போல💘
என்னையும்💘
உன்னையும்💘
இணைப்பது💘

Wednesday, 6 April 2016

Kavithai

மனைவி ஊருக்குப் போயிருந்தபோது ஒருவர் எழுதிய கவிதை..

“தவிப்பு..”
வருடத்திற்கு ஒரு முறை
இரண்டு வாரம்
தாய் வீடு போகிறாய்...
பிள்ளைகள் இல்லாமல்
பொலிவிழந்து களையிழந்து
காணப்படுகிறது வீடு...
காபி போட அடுப்பில்
பால் வைத்தால் பாதி
பொங்கி வழிந்து விடுகிறது..
வீட்டைப் பெருக்கிய
இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும் வலிக்கிறது...
செலவிற்குப் பயந்து
சமைக்க ஆரம்பித்தால்
உப்பு போட மறந்து விடுகிறது..
இரு மடங்கு விலை வைத்தும்
சொத்தைக் காய்கறிகளை.. பழங்களை
தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்...
முரட்டுத்தனமாய் அடித்து
கசக்கிப் பிழிந்து துவைத்தால்
கிழிந்து விடுகிறது துணி...
தண்ணீர்.. மோட்டார்.. டி வி
போட்டால் அணைக்காமல்
தூங்கி விடுகிறேன்...
கதவைப் பூட்டாமலேயே
சமயலறை எரிவாயுவை
அணைக்காமலேயே
வெளியில் கிளம்பி விடுகிறேன்..
தயிருக்கும் இட்லி மாவிற்கும்
வேறுபாடு தெரியவில்லை..
இப்படியாகத் தனிமையில்
தவித்துப் போனாலும்
நீ வந்தவுடன்
கூசாமல் பொய் சொல்கிறேன்...
“இன்னும் ஒரு வாரம்
இருந்து விட்டு வரலாமே...
நான் ஜாலியாக இருக்கிறேன்...”
என்று.....

ஒரு வார இதழில் 1500 ரூபாய் பரிசு பெற்ற கவிதை.

Wednesday, 30 March 2016

Sad kavi ®

காதலை  ஏளனம்செய்யும் சிலர் கேட்க்கும்   கேள்வி

இப்போ ஏன் காதலுக்காக யார்ரும் இறப்பது இல்லைன்னு

இறந்தால் காதலித்தவர்களை நினைக்க முடியாது .. பிரிந்த காதலை நினைப்பது  இருப்பதுவிட கொடியது

காதல்

ஆண்களின் காதலை விட
பெண்களின் காதல்
எப்பவும் அழகோ அழகுதான்.....
விரட்டி விரட்டி காதலிக்கும்
போது
ஒரு வார்த்தை பேசமாட்டாளா
என்று ஏங்கிய நம்மை
பேசி பேசியே கொள்ளும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
தங்கம் ,மா ,செல்லம் ,அம்முகுட்டி,
என்று நாம் கொஞ்சும் போது
அவள்
மௌனமாக சிரிக்கும் போதும்
பெண்களின் காதல் அழகுதான்....
காய்ச்சல் என்று சிறிய பொய்
சொன்னாலும் கூட உடனே நம்பி
கண்ணீர் சிந்தி நம்மை
காதல் மழையில் நனைய
வைக்கும்போதும்
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில்
கொடுத்துவிட்டு
நேரில் ஒரு முத்தத்திற்கு நம்மை
தவிக்கவிடும்போதும்
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
யாரேனும் நம்மை தவறாக பேசும்
போது
அங்கே பேசாமல் இருந்துவிட்டு
வீட்டிற்க்கு
வந்ததும் நம்மை திட்டி தீர்க்கும்
போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்.....
யார்கூடவும் பகிர்ந்து
கொள்ளமுடியாத
விசயங்களை நம்மோடு பகிர்ந்து
வெட்கப்படும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
நாம் முதல் முறை காதலை
சொல்லும் போது
முறைத்து பார்த்துவிட்டு
பின்னர் நம்மை காதல் கண்கள்
கொண்டு
தாக்கும் போது பெண்களின்
காதல்
அழகோ அழகுதான்...
நம்மோடு வெளியே வரும் போது
யாரும் பார்க்காத போதும்
நம்மை யாரோ பார்த்து
விடுவார்களோ என்று
நம்மையும் சேர்த்து பயமுறுத்தும்
போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
வெண்ணிலா ஐஸ் கிரீம்
டைரி மில்க் சாக்லேட்
மாசா கூல்ட்ரிங்க்ஸ்
இதுவே அதிகம் பிடிக்குமென
நம் செலவை சிக்கனம்
செய்யும் போது பெண்களின்
காதல்
அழகோ அழகுதான்....
எதுவும் வேணுமா என்று
கேட்டாலும்
நீ கேட்டதே சந்தோஷமா இருக்கு
என்று
நம்மளையே அசத்தவைக்கும்
போது
பெண்களில் காதல் அழகோ
அழகுதான் .....
நம்மோடு பகிர்ந்து கொள்ள
முடியாத
ஆசைகளை படுக்கை அறையில்
தனியாக தலையனையோடு
பகிர்ந்து
கொள்ளும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
ஆயிரம் உறவுகளை காதலுக்காய்
தூக்கி எரியும் போதும்
உறவுக்காய் காதலை தூக்கி
எரியும் போதும் பெண்களின்
காதல்
அழகோ அழகுதான் ......
இரண்டில் எது நடந்தாலும்
அதிகம் பாதிக்க படுவது
பெண்கள்தான்....
ஆண்களின் காதல்
பரிமாறப்படும் பிறரிடத்தில் .,
ஆண்களின் காதல் தோல்வியை
காட்டிகொடுக்கும் தாடியும் பீடியும் .,
ஆனால்
பெண்களின்
காதலும் சரி
காதல் தோல்வியும் சரி
யாருக்குமே தெரியாது
அவர்களுக்கு மட்டுமே
அனுபவிக்கும் வலி
வாழ்க்கை முழுவதும்....
சுதந்திரமான இந்த உலகில்
சுதந்திரமற்ற பறவைகள் பெண்கள்
தான் ..
நம் கைகோர்த்து நடக்க
நம் மடிசாய்ந்து உறங்க
நம் தோல் சாய்ந்து அமர
நம் நெஞ்சினில்
சாய்ந்துகொள்ள
நம்மோடு மனம் திறந்து பேச
நம் நெஞ்சினில் இருக்கும்
முடியை
இழுத்து விளையாட
இப்படி கணக்கில்லா ஆசைகள்
இருந்தும்
நாம் அருகில் இருக்கும் போது
யாதும் அறியாதவளாய் அடக்கமாய்
அமர்ந்து
நம்மை இம்சிக்கும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
இந்த காதல் வானில்
சிறகொடிந்த
பறவைகளே அதிகம்.,
அதிலும்
ஆண் பறவைகளை விட
பெண் பறவைகளே அதிகம் ..
மனதார விரும்பி
மனதை கொடுத்தது ஒருவனோடு
மனமில்லாமல் போவது
ஒருவனோடு .,
காதலன் ஒருவன்
கணவன் ஒருவன்
நரக வாழ்க்கை ..
பெண்களின் காதலை
ஒருபோதும் ஒப்பிடமுடியாது
ஆண்களின் காதலோடு.....
என்றுமே ஆண்களின் காதலை விட
பெண்களின்
காதலில்தான் அழகும் வலியும்
அதிகம்

Pwince Shakir ®

kavithai ®

என் உயிரை அர்ப்பணம் செய்தேன், உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன், சத்தியமும் ‌ஜீவனுமாய் நிலைக்கிறாய். என்னுலகம் கைவசம் இல்லை, என் பெயரும் ஞாபகம் இல்லை, சத்தியமாய் என்னருகே நீ இருக்கிறாய்.
கண்ணீராடும் பிள்ளைக்கு இனி நானே கன்னி தாய் நாளை முதல்.

Kadhal Kavithai ®

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்… வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…

இமையாக என்னை காக்கும் என் அன்பானவன்